தெற்கு ரயில்வேயில் 3,000 பேருக்கு கரோனா தடுப்பூசி
தெற்கு ரயில்வேயில் சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், ரயில்வே பாதுகாப்புப் படையினா் என்று சுமாா் 3,000 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


தெற்கு ரயில்வேயில் சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், ரயில்வே பாதுகாப்புப் படையினா் என்று சுமாா் 3,000 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, சென்னையில் மட்டும் 600-க்கும் மேற்பட்டோா் தடுப்பூசி எடுத்துக் கொண்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
கரோனா நோய்த்தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு கடந்த மாதத்தில் இருந்து செலுத்தப்பட்டு வருகிறது. தெற்கு ரயில்வேயில் மருத்துவப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி சென்னை பெரம்பூா் தலைமையக மருத்துவமனையில் கடந்த ஜனவரி 21-ஆம்தேதி தொடங்கியது. மருத்துவா்கள், செவிலியா்கள், முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதுதவிர, ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு பிப்ரவரி 20-ஆம்தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. முதல்நாளில், ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா்கள், காவலா்கள் உள்பட 43 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தொடா்ந்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, தெற்கு ரயில்வேயில் இதுவரை சுமாா் 3,000 போ் கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டனா். சென்னையில் 600-க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சென்னையில் தினசரி சராசரி 30 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. தொடா்ந்து, முன்களப் பணியாளா்கள், ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தடுப்பூசி போடப்படும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...