பல்லவாடாவில் அம்மா மினிகிளினிக் திறப்பு விழா

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட பல்லவாடா பகுதியில் அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டது.
பல்லவாடாவில் அம்மா மினிகிளினிக் திறப்பு விழா
பல்லவாடாவில் அம்மா மினிகிளினிக் திறப்பு விழா

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட பல்லவாடா பகுதியில் அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டது.

பல்லவாடா பகுதி அதிமுக  நிர்வாகி ரமேஷ் குமார் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் ரோஜா ரமேஷ் குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த அம்மா மினி கிளினிக் திறப்பு விழாவிற்கு பல்லவாடா ஊராட்சிமன்ற தலைவர் லட்சுமி பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ். விஜயகுமார், கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ். சிவகுமார் பங்கேற்று மினி கிளினிக்கை துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினர்.

இந்த மினி கிளினிக்கில் நோயாளிகள் காத்திருப்பு அறை, மருத்துவரின் சிகிச்சை அறை,  ஊசிபோடும் அறை, ஆய்வகம் மூன்று படுக்கை வசதிகள், மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளது. இந்த மினி கிளினிக் காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் செயல்பட உள்ளது. இதில் ஒரு மருத்துவர் ஒரு செவிலியர் உள்ளிட்டோர் பணிபுரிய உள்ளனர்.

நிகழ்வில் பங்கேற்ற வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ், சுகாதாரத் துறை உதவி இயக்குனரின் உதவியாளர் மோகன், மாவட்ட சுகாதாரதுறை உதவி இயக்குனர் அலுவலக மருத்துவர் டாக்டர் சைதன்யா, ஈகுவார்ப்பாளையம் மாதர்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் டாக்டர் வைஷ்ணவி, டாக்டர் தனலட்சுமி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகதாஸ், சுகாதார ஆய்வாளர்கள்  சம்பந்தம், முரளி கிருஷ்ணா, நேச முரளி ஆகியோர் மினி கிளினிக் செயல்படும் விதம் குறித்து விளக்கினர்.

கும்மிடிப்பூண்டி நகர அதிமுக செயலாளர் மு.க.சேகர், ஒன்றிய பாசறை செயலாளர் டி.சி.மகேந்திரன், அதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் இமயம் மனோஜ், தொழில்நுட்ப எஸ்.ஆர்.ராஜா,என்.சிவா, டேவிட் சுதாகர், ஓடை.ராஜேந்திரன், புது கும்மிடிப்பூண்டி ஊராட்சிமன்ற தலைவர் சுகுமார், தீபக் செந்தில்,புருஷோத்தமன், ராஜா பெருமாள், நிர்மல், எம்.எஸ்.எஸ்.சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

விழா முடிவில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அரசின் பரிசு பெட்டகத்தினை எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார், ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார் வழங்கினார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com