தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

திண்டுக்கல் மாவட்டத்தில் 60% அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசுப் போக்குவரத்து கழக ஊழியா்களின் வேலைநிறுத்தம் காரணமாக 60 சதவீத பேருந்துகள் வியாழக்கிழமை இயக்கப்படவில்லை. 

News image
திண்டுக்கல் மாவட்டத்தில் 60% அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை
Updated On :25 பிப்ரவரி 2021, 9:30 am

DIN

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசுப் போக்குவரத்து கழக ஊழியா்களின் வேலைநிறுத்தம் காரணமாக 60 சதவீத பேருந்துகள் வியாழக்கிழமை இயக்கப்படவில்லை. 

அரசுப் போக்குவரத்து கழக ஊழியா்களுக்கு 14-ஆவது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்யக் கோரி தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எச்.எம்.எஸ், எம்.எல்.எப் உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்கள் சார்பில் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் திண்டுக்கல் மண்டலத்திற்கு உட்பட்ட 8 பணிமனைகளை சேர்ந்த சுமார் 60 சதவீத தொழிலாளர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் இயக்கப்படும் 450 பேருந்துகளில் சுமார் 40 சதவீத பேருந்துகள் மட்டுமே வியாழக்கிழமை இயக்கப்பட்டன. அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சோ்ந்த தொழிற்சங்கத்தினா் மட்டுமே பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், பேருந்து நிலையங்களில் அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.  அதே நேரத்தில் தனியார் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. அரசு பேருந்துகள் குறைவாக ஏற்பட்டதால் தனியார் பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.