தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருவிடைவாசலில் பெட்ரோல் நிலையம் திறப்பு

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அடுத்த திருவிடைவாசல் பெட்ரோல் நிலையத்தை மாவட்ட எஸ்.பி., திறந்து வைத்தார்.

News image

திருவிடைவாசலில் பெட்ரோல் நிலையம் திறப்பு

Updated On :25 பிப்ரவரி 2021, 11:30 am

DIN

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அடுத்த திருவிடைவாசல் பெட்ரோல் நிலையத்தை மாவட்ட எஸ்.பி., திறந்து வைத்தார்.

துபாய், குவைத், புருனே உள்ளிட்ட நாடுகளின் தொழிலதிபர் ஆ.எஸ்.அப்துல் ஹமீது ஆலோசனையின்படி, அவரது மகன் நூருல் அமீன் ஏற்பாட்டில், திருவிடைவாசல் பிரதான சாலையில், பெட்ரோல் பங்க் திறக்கப்பட்டது. 

இவ்விழாவிற்கு, மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம்.பி. துரைவேலன் தலைமை வகித்தார். பொதக்குடி, அத்திக்கடை ஜமாஅத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். பெட்ரோல் பங்க் உரிமையாளர் நூருல் அமீன் வரவேற்றார். பெட்ரோல் பங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எம்.துரை திறந்து வைத்து முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார். 

Story image

விழாவில், பொதக்குடி ஊர் உறவின் முறை ஜமாஅத் நிர்வாக சபை அறப்பணிச் சங்க செயலாளர் எம்.எம்.ரஃப்யூதீன், மதர் இந்தியா மேல் நிலைப்பள்ளி தாளாளரும், ஆர்.எஸ்.ஹமீது நண்பருமான வி.ஆர்.என்.பன்னீர் செல்வம், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் தினேஷ் குமார், மன்ப உல் உலா மேல்நிலைப் பள்ளி தாளாளர் திமிஜ்ஜீதீன், ஆங்கில ஆசிரியர் அப்துல் வஹாப் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

நிறைவாக, ஆர்.எஸ். அப்துல் ஹமீது மருமகன் அகமது பதார் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை, மேலாளர் ஏ.டபுள்யூ. முகமது கசாவி, சுரேஷ் மற்றும் நண்பர்கள் கவனித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.