ஏற்காடு செல்ல முயன்ற சுற்றுலா பயணிகள் திருப்பி அனுப்பி வைப்பு

புத்தாண்டை முன்னிட்டு ஏற்காடு செல்ல முயன்ற சுற்றுலாப் பயணிகள், அடிவார சோதனைச் சாவடியில் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஏற்காடு செல்ல தடை விதித்துள்ளதை அறியாமல் ஏற்காடு செல்ல முயன்ற சுற்றுலாப் பயணிகள், அடிவார சோதனைச் சாவடியில் திருப்பி அனுப்பும் காவலர்கள்.
ஏற்காடு செல்ல தடை விதித்துள்ளதை அறியாமல் ஏற்காடு செல்ல முயன்ற சுற்றுலாப் பயணிகள், அடிவார சோதனைச் சாவடியில் திருப்பி அனுப்பும் காவலர்கள்.
Updated on
1 min read


சேலம்: புத்தாண்டை முன்னிட்டு ஏற்காடு செல்ல முயன்ற சுற்றுலாப் பயணிகள், அடிவார சோதனைச் சாவடியில் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

சேலம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக ஏற்காட்டில் உள்ள சுற்றுலா தலங்களான அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா மற்றும் படகு இல்லம் உள்ளிட்ட ஏற்காடு சுற்றுலா தலங்கள் டிச.31 மாலை முதல் ஜன.2 மாலை வரை மூடப்படுகிறது. 

மேற்குறிப்பிட்ட இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வேண்டாம் மாவட்ட சுற்றுலா அலுவலர் வெ. ஜெனார்த்தனம்  தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் புத்தாண்டையொட்டி கார்கள், இரு சக்கர வாகனங்களில் ஏற்காடு செல்ல வந்த சுற்றுலாப் பயணிகளை அடிவாரத்தில் உள்ள சோதனைச் சாவடியில் நிறுத்தி காவலர்கள் திருப்பி அனுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com