கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கோவை நகரில்  பல்வேறு இடங்களில் மு.க. அழகிரி ஆதரவு போஸ்டரால் பரபரப்பு

கோவை நகரில்  பல்வேறு இடங்களில் மு.க. அழகிரி ஆதரவு போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பதால் திமுகவினரிடையே பரபரப்பு நிலவி வருகிறது. 

News image
கோவை நகரின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள மு.க. அழகிரி ஆதரவு போஸ்டர்.
Updated On :3 ஜனவரி 2021, 5:35 am

DIN

கோவை நகரில்  பல்வேறு இடங்களில் மு.க. அழகிரி ஆதரவு போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பதால் திமுகவினரிடையே பரபரப்பு நிலவி வருகிறது. 

மதுரையில் மு.க அழகிரி ஞாயிற்றுக்கிழமை (ஜன.3) தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இதில் புதிய கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்துள்ளனர். 

இந்நிலையில், கோவையில் அவிநாசி ரோடு , திருச்சி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு , சிறுவாணி மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரத்துக்கு மேற்பட்ட போஸ்டர்கள் அச்சடித்து ஒட்டப்பட்டிருந்தது. போஸ்டரில், ‘தன்மானம் காக்க திராவிடம் மீட்க கலைஞர் திமுக உருவாக்க மதுரையை நோக்கி அணி திரண்டு வாரீர்’ என்ற வாசகங்களுடன் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. 

மு.க. ஸ்டாலினை வரவேற்று வைக்கப்பட்ட இடங்களிலும் மு.க அழகிரிக்கு ஆதரவான போஸ்டர்கள் அதிகளவு ஒட்டப்பட்டிருந்தது. கலைஞர் திமுக குறித்த போஸ்டர்களால் திமுகவினரிடையே பரபரப்பு நிலவுகிறது. 

நடிகர் ரஜினிகாந்த் கட்சி துவங்குவார் என எதிர்பார்த்திருந்த அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அவருடன் புதிய கட்சியை துவக்க மு.க அழகிரி திட்டமிட்டு இருந்ததாக தெரிகிறது. ரஜினி பின்வாங்கிய நிலையில் மு.க அழகிரி தனது நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளார். புதிய கட்சி அறிவிப்பு வெளியாக இருப்பதால் திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.