தோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுசென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

துறையூர், உப்பிலியபுரம் ஒன்றியங்களில் மினி கிளினிக் தொடக்கம்

திருச்சி மாவட்டம், துறையூர் மற்றும் உப்பிலியபுரம் ஒன்றியங்களில் தலா ஒரு மினி கிளினிக் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

News image
மினி கிளினிக்கை தொடக்கி வைத்த முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி அங்கு ஒரு பெண்ணுக்கு ரத்த அழுத்தம் பரிசோதிப்பதைக் கவனிக்கிறார்.
Updated On :4 ஜனவரி 2021, 9:24 am

DIN

திருச்சி மாவட்டம், துறையூர் மற்றும் உப்பிலியபுரம் ஒன்றியங்களில் தலா ஒரு மினி கிளினிக் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

துறையூர் தொகுதிக்குள் முதல்கட்டமாக துறையூர் ஒன்றியத்தில் விசாலாட்சியம்மாள் சமுத்திரம் ஊராட்சியிலும், உப்பிலியபுரம் ஒன்றியத்தில் தளுகை ஊராட்சிக்குள்பட்ட த.பாதர்பேட்டை கிராமத்திலும் மினி கிளினிக்குகள் தொடக்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து முன்னாள் அமைச்சரும், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலருமான மு.பரஞ்சோதி மினி கிளினிக்குகளை ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கேற்றியும் தொடக்கி வைத்து அதிமுக அரசின் சாதனைகள் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் பேசினார்.

மினி கிளினிக்கை தொடக்கி வைத்து அங்கு கர்ப்பிணிப் பெண்களுக்கு அம்மா ஊட்டச்சத்து பெட்டகத்தை ஒரு கர்ப்பிணிப் பெண்ணிடம் வழங்குகிறார் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி.

மினி கிளினிக்கை தொடக்கி வைத்து அங்கு கர்ப்பிணிப் பெண்களுக்கு அம்மா ஊட்டச்சத்து பெட்டகத்தை ஒரு கர்ப்பிணிப் பெண்ணிடம் வழங்குகிறார் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி.

நிகழ்ச்சியில் துறையூர் முன்னாள் எம்எல்ஏ த. இந்திராகாந்தி, துறையூர் வடக்கு ஒன்றிய செயலர் சேனை செயலர், வழக்குரைஞர் பிரிவு மாவட்டச் செயலர் ஏ. அன்புபிரபாகரன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் விசாலாட்சியம்மாள் சமுத்திரம் ஊராட்சி தலைவர்கள் வசந்தாதேவி(வி.ஏ.சமுத்திரம்), கலைசெல்வி(தளுகை), ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சரண்யா ஜெய்சங்கர், அத்தியப்பன், முத்துக்குமார் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், வட்டார மருத்துவ அலுவலர்கள் பி.செந்தில்குமார்(துறையூர்), மணிமேகலை(உப்பிலியபுரம்) உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டனர்.

மினிகிளினிக் மருத்துவர்கள் ஜி. முத்துக்குமார்(வி.ஏ.சமுத்திரம்), செல்தில்குமார்(தளுகை) ஆகியோர் மருத்துவப் பரிசோதனைக்குச் சென்ற பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். கர்ப்பிணிப் பெண்களுக்கு அரசு தருகிற அம்மா ஊட்டச்சத்து பெட்டகம் வி.ஏ.சமுத்திரத்தில் 10 பேருக்கும், தளுகையில் 12 பேருக்கும் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.