பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சிறுமி மித்ராவின் கண்ணீர் உங்களைச் சும்மா விடாது: கமல் ஆவேசம்

சிறுமி மித்ராவின் கண்ணீர் உங்களைச்  சும்மா விடாது என்று மநீம தலைவர் கமல் ஆவேசம் பொங்கத் தெரிவித்துள்ளார்.

News image
இது ட்வீட்டில் அடங்காத் துயரம் என்று தமிழறிஞர் தொ.பரமசிவன் மறைவு குறித்து மநீம தலைவர் கமல் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
Updated On :4 ஜனவரி 2021, 2:44 pm

DIN

சென்னை: சிறுமி மித்ராவின் கண்ணீர் உங்களைச்  சும்மா விடாது என்று மநீம தலைவர் கமல் ஆவேசம் பொங்கத் தெரிவித்துள்ளார்.

விவசாயக் கடன்சுமை தாங்க இயலாமல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு அருகேயுள்ள பிள்ளையார்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நாராயணசாமி தற்கொலை செய்துகொண்டார். அவர் தனது தற்கொலை தொடர்பாக தனது பேத்தி மித்ராவிடம் மன்னிப்புக் கேட்டு சுவற்றில் வாசகத்தினை எழுதி வைத்திருந்தார்.  

இந்நிலையில் சிறுமி மித்ராவின் கண்ணீர் உங்களைச்  சும்மா விடாது என்று மநீம தலைவர் கமல் ஆவேசம் பொங்கத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திங்களன்று அவப்ர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பிள்ளையார்நத்தம் விவசாயி நாராயணசாமியின் தற்கொலை உளம் நடுங்கச்செய்கிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்திய விவசாயிகளின் நிலைமை இதுதான். சாகடிக்கப்படுவதை தற்கொலை என்றா சொல்வது?

எனக்கு சாபத்தில் நம்பிக்கை இல்லை ஆனால், கோபத்தில் நம்பிக்கை உண்டு. சிறுமி மித்ராவின் கண்ணீர் உங்களைச்  சும்மா விடாது.’ என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.