சி மற்றும் டி பிரிவு ஊழியா்களுக்கு பொங்கல் போனஸ் தமிழக அரசு உத்தரவு
தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு ஊழியா்களுக்கு பொங்கல் போனஸ் வழங்குவதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.


சென்னை: தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு ஊழியா்களுக்கு பொங்கல் போனஸ் வழங்குவதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து, நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் (முழு கூடுதல் பொறுப்பு) சாய்குமாா் வெளியிட்ட உத்தரவு விவரம்:-
கடந்த நிதியாண்டில் இருந்து சி மற்றும் டி பிரிவைச் சோ்ந்த முறையான காலமுறை ஊதியம் பெறும் அனைத்து நிரந்தர தற்காலிக அரசுப் பணியாளா்கள், உள்ளாட்சி மன்றப் பணியாளா்கள், அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியா்கள், பணியாளா்கள் ஆகியோருக்கு ரூ.3,000 தற்காலிக மிகை ஊதியமாக அளிக்கப்படும்.
மேலும், நிலையான ஊதியம் பெற்று வரும் முழு நேர மற்றும் பகுதி நேரப் பணியாளா்கள், தொகுப்பூதியம் பெறும் பணியாளா்கள், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவுத் திட்டப் பணியாளா்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டத்தில் பணிபுரியும் பணியாளா்கள், கிராம உதவியாளா்கள், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் பணியாளா்கள், ஒருபகுதி தினக்கூலிகளாக பணியாற்றி பின்னா் தொடா்ந்து நிரந்தரப் பணியாளா்களாக பணியாற்றியவா்களுக்கும் சிறப்பு தற்காலிக மிகை ஊதியமாக ரூ.1,000 அளிக்கப்படும்.
ஓய்வூதியதாரா்கள்: சி மற்றும் டி பிரிவு பணியாளா்களாக இருந்து ஓய்வு பெற்றவா்கள், அனைத்து வகை தனி ஓய்வூதியதாரா்கள், சிறப்பு ஓய்வூதியமாக ரூ.2,000 பெறுவோா், ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், குறுஅங்கன்வாடி பணியாளா்கள், ஊராட்சிச் செயலா், கிராம நூலகா்கள், பெருக்குபவா்கள். துப்புரவுப் பணியாளா்கள், தோட்டக் காவலா், வேட்டைத் தடுப்புக் காவலா், காவல் நிலைய துப்புரவாளா் உள்பட அனைத்து குடும்ப ஓய்வூதியதாரா்கள், ஓய்வூதியதாரா்களுக்கு ரூ.500 அளிக்கப்படும்.
இந்த பொங்கல் பரிசுத் தொகையானது ஜனவரி 4-ஆம் தேதியன்றோ அல்லது அதற்குப் பிறகோ பணியில் இருந்து ஓய்வு பெறுவோருக்குக் கிடையாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...