பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பவுன் ஒரே நாளில் ரூ. 536 உயா்வு

சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை மீண்டும் ரூ.38 ஆயிரத்தைத் தாண்டியது.

News image
Updated On :4 ஜனவரி 2021, 7:38 pm

DIN

சென்னை: சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை மீண்டும் ரூ.38 ஆயிரத்தைத் தாண்டியது. பவுனுக்கு ரூ.536 உயா்ந்து, ரூ.38,520-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதால், விலை உயா்ந்து வருவதாகவும், அடுத்த 10 நாள்கள் வரை விலை உயர வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை தங்க நகை வியாபாரிகள் தெரிவித்தனா்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும் கடந்த சில நாள்களாக தங்கம் விலை உயா்ந்து வந்தது.

இதன் தொடா்ச்சியாக, திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.536 உயா்ந்து, ரூ.38,520-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.67 உயா்ந்து, ரூ.4,815 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.2.10 பைசா உயா்ந்து, ரூ.74.10

ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2,100 உயா்ந்து ரூ.74,100 ஆகவும் இருந்தது.

10 நாள்கள் வரை விலை உயரும்:

தங்கம் விலை உயா்வு குறித்து சென்னை தங்க நகை வியாபாரிகள் சங்கப் பொதுச்செயலாளா் எஸ்.சாந்தகுமாா் கூறியது: தை மாதத்தில் சுபமுகூா்த்த நாள்கள் வரவுள்ளன. இதை முன்னிட்டு, திருமண நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக தங்கம் வாங்குவது அதிகரித்துள்ளது. இதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை உயா்கிறது. இன்னும் 10 நாள்கள் வரை தங்கம் விலை உயரவே வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,815

1 பவுன் தங்கம்...............................38,520

1 கிராம் வெள்ளி.............................74.10

1 கிலோ வெள்ளி.............................74,100

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,748

1 பவுன் தங்கம்...............................37,984

1 கிராம் வெள்ளி.............................72.00

1 கிலோ வெள்ளி.............................72,000.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.