ஜனவரியில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்

இந்த மாதத்தில் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த மாதத்தில் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த மாதத்தில் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Updated on
1 min read

சென்னை: இந்த மாதத்தில் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கரோனா ஊரடங்கின் காரணமாக நீண்ட இடைவேளைக்குப் பிறகு கடந்த வாரம்தான் டாஸ்மாக் கடைகளில் உள்ள பார்கள் திறக்கப்பட்டன.

இந்நிலையில் இந்த மாதத்தில் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் மோகன் செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜனவரி மாதம் 15, 26, மற்றும் 28 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்டிருக்கும் என்றும், முறையே திருவள்ளுவர் தினம், குடியரசு தினம் மற்றும் வடலூர் ராமலிங்கர் நினைவு தினங்களை ஒட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com