தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கிராமக் கூட்டம்

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அவிநாசி கருணைபாளையத்தில் கிராமக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
கருணைபாளையத்தில் கிராமக்கூட்டம்
கருணைபாளையத்தில் கிராமக்கூட்டம்
Updated on
1 min read

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அவிநாசி கருணைபாளையத்தில் கிராமக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் ஏ.முத்துரத்தினம் தலைமை வகித்தார். வேலாயுதம்பாளையம் முன்னாள் ஊராட்சி தலைவர் பி.சாமியப்பன் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன், மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், ஒன்றிய செயலாளர் எஸ்.வெங்கடாசலம், அவிநாசி ஒன்றியக் குழு உறுப்பினர் பி.முத்துசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  

இதில் கூட்டம் துவக்கமாக தில்லி விவசாய போராட்டத்தில் உயிர்நீத்த விவசாய தியாகிகளுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து, தில்லி போராட்ட நிதியாகப் பொறுப்பாளர்கள் வேலுச்சாமி ரூ.2 ஆயிரம், சிவசாமி ஆயிரம் ரூபாயும் வழங்கினர். 

இதைத்தொடர்ந்து, கருணைபாளையம் தவிச கிளை நிர்வாகிகளாக தலைவர் ரங்கசாமி, செயலாளர் சக்திவேல், பொருளாளர் பொன்னுசாமி, துணைத் தலைவர் வேலுச்சாமி, துணைச் செயலாளர் தங்கராசு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நிறைவாக தில்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்தும், மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரியும் கோஷம் எழுப்பினர். கூட்டத்தில் வேலாயுதம்பாளையம், புதுப்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com