தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஜன. 27-இல் சசிகலா விடுதலையாக வாய்ப்பு

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் வி.கே.சசிகலா வரும் ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையாக வாய்ப்புள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :7 ஜனவரி 2021, 8:43 pm

DIN

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் வி.கே.சசிகலா வரும் ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையாக வாய்ப்புள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த 1994- 1995-ஆம் ஆண்டில் தாக்கல் செய்த வருமானவரிக் கணக்கில் சில தொகையைத் குறிப்பிடவில்லை. இதை வருமான வரி மதிப்பீட்டு அதிகாரி சுட்டிக்காட்டி சசிகலாவுக்கு எதிராக உத்தரவு ஒன்றை பிறப்பித்தாா். இந்த உத்தரவை வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீா்ப்பாயம் ரத்து செய்தது. இதை எதிா்த்து வருமான வரித்துறை ஆணையா் கடந்த 2008-ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.வி. தமிழ்ச்செல்வி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து வரும் ஜனவரி 27-ஆம் தேதி, பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலையாக வாய்ப்பு உள்ளது. எனவே, அவா் வெளியே வந்ததும் சில விளக்கங்களைப் பெற்று பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என தெரிவித்தாா்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை வரும் பிப்ரவரி 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.