ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று முதல் 5 நாள்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :7 ஜனவரி 2021, 8:07 am

DIN

தமிழகத்தில் இன்று முதல் 5 நாள்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிகக் கன மழையும், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

08.01.21: ராமநாதபுரம், தூத்துக்குடி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

09.01.21: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

10.01.21: ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிகக் கன மழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், திருநெல்வேலி மற்றும் புதுச்சேரியில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

11.01.21: ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், திருநெல்வேலி மற்றும் புதுச்சேரியில் இடியுடன் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கன மழையும் பதிவாகியுள்ளது. 

மூன்று மாவட்டங்களில் மிகக் கனமழையும், 13 மாவட்டங்களில் கன மழையும் பெய்துள்ளது.

அதிகபட்சமாக மாத்தூர், நத்தம் தலா 21 செ.மீ மழையும், ரிஷிவந்தியம் 19 செ.மீ மழையும், வேப்பூர் 18 செ.மீ மழையும், கலயநல்லூர் 16 செ.மீ மழையும், சங்கராபுரம், பீளமேடு, குடவாசல் தலா 11 செ.மீ மழையும், பூந்தமல்லி 10 செ.மீ மழையும், ராஜபாளையம், ஆண்டிபட்டி தலா 9 செ.மீ மழையும், திருவிடைமருதூர், தம்மம்பட்டி, விழுப்புரம் தலா 8 செ.மீ மழையும், புதுச்சேரி, பூண்டி, அரவக்குறிச்சி தலா 7செ.மீ மழையும் பெய்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.