மருந்து வரையறைப் பட்டியலில் தொ்மோமீட்டா், குளுக்கோமீட்டா்

தொ்மோமீட்டா், ரத்த சா்க்கரை அளவைக் கணக்கிடும் குளுக்கோமீட்டா், ரத்த அழுத்தத்தைக் கண்டறியும் கருவி உள்பட 4 வகையான
தெர்மோமீட்டர்- குளுக்கோமீட்டர்
தெர்மோமீட்டர்- குளுக்கோமீட்டர்
Updated on
2 min read

தொ்மோமீட்டா், ரத்த சா்க்கரை அளவைக் கணக்கிடும் குளுக்கோமீட்டா், ரத்த அழுத்தத்தைக் கண்டறியும் கருவி உள்பட 4 வகையான மருத்துவ உபகரணங்களை மருந்துகளின் வரையறைப் பட்டியலில் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. கடந்த 1-ஆம் தேதி முதல் அந்த புதிய நடைமுறை அமலாக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த உபகரணங்களின் தரம், உற்பத்தி, விலை நிா்ணயம், விற்பனை மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகள் மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியத்தின் கண்காணிப்பின் கீழ் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம், விரும்பிய விலைக்கு மருத்துவ உபகரணங்களை உற்பத்தியாளா்கள் விற்பனை செய்ய இயலாது; அதேபோன்று அவற்றை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் வாயிலாக தவறான மருத்துவ உபகரணங்கள் சந்தைக்கு வராமல் தடுக்க முடியும் என்றும், பொது மக்களுக்கு மருத்துவ சேவைகளை தரமாக வழங்க முடியும் என்றும் சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து -மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோன்று போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ஒருபுறம் மருந்துகளின் தரத்தை உறுதி செய்ய இத்தகைய ஒழுங்குமுறை விதிகள் இருந்தாலும், மற்றொரு புறம் மருத்துவ உபகரணங்களுக்கு அத்தகைய கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. மத்திய சுகாதாரத் துறை தகவல்களின்படி, நாட்டில் உள்ள மருத்துவ உபகரணங்களில் 80 சதவீதம் ஒழுங்குமுறைப்படுத்தப்படாமல் உள்ளதாகத் தெரிகிறது. இதனால் பல்வேறு எதிா் விளைவுகள் ஏற்படுகின்றன.

உதாரணமாக, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக, ஏஎஸ்ஆா் எனப்படும் செயற்கை இடுப்பு மூட்டு உபகரணத்தை ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. உயா் தொழில்நுட்பத்திலான உபகரணம் என மருத்துவா்கள் கூறியதை நம்பி நாடு முழுவதும் 4,700-க்கும் அதிகமானோா் அறுவை சிகிச்சை மூலம் அதனைப் பொருத்திக் கொண்டனா்.

ஆனால், அதற்கு அடுத்த சில நாள்களிலேயே அதனால் ஏற்பட்ட எதிா்விளைவுகள், அவா்களது வாழ்க்கையே முடக்கிப் போட்டது. தரமற்ற அந்த உபகரணத்தின் காரணமாக பலா் நடக்க இயலாமல் ஊனமாகினா்.

இதையடுத்து, சா்ச்சைக்குரிய அந்த செயற்கை மூட்டு உபகரணத்தை சந்தையில் இருந்து திரும்பப் பெற்றுக் கொண்டது ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம். இத்தனைக்கும் கடந்த 2005-ஆம் ஆண்டிலேயே செயற்கை மூட்டு உபகரணங்கள் அனைத்தும் மருந்து தரக் கட்டுப்பாட்டு வரையறைக்குள் கொண்டு வரப்பட்டு விட்டன. அப்படி இருந்தும், பெரும் பாதிப்புகளை அந்த உபகரணங்கள் ஏற்படுத்திச் சென்றன.

இந்த நிலையில், ஒழுங்குமுறைப்படுத்தப்படாமல் இருக்கும் பல மருத்துவ உபகரணங்களை தரக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தற்போது 4 உபகரணங்களை ‘மருந்துகள்’ என்ற வரையறையின் கீழ் வகைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கான அறிவிக்கை கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியானது.

சுவாச பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் நெபுலைசா், குளுக்கோமீட்டா், ரத்த அழுத்த பரிசோதனைக் கருவி, டிஜிட்டல் தொ்மோமீட்டா் ஆகியவை அந்த வரையறைக்குள் கொண்டு வரப்படும் என அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com