தஞ்சை: மின் கம்பியில் தனியார் பேருந்து உரசியதில் 4 பேர் பலி

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி வரகூர் கிராமத்தில் சாலையோரத்தில் மின்சார கம்பி மீது தனியார் பேருந்து உரசியதில் 4 பேர் பலியாகினர்.
தஞ்சை: தனியார் பேருந்து மின்சார கம்பியில் உரசியதில் 4 பேர் பலி
தஞ்சை: தனியார் பேருந்து மின்சார கம்பியில் உரசியதில் 4 பேர் பலி
Updated on
1 min read


தஞ்சை: தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி வரகூர் கிராமத்தில் சாலையோரத்தில் மின்சார கம்பி மீது தனியார் பேருந்து உரசியதில் 4 பேர் பலியாகினர்.

வரகூர் கிராமத்தில் பயணிகளுடன் வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று, சாலையோரம் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் இறங்கியது.

அப்போது, தனியார் பேருந்து மீது மின்சார கம்பி உரசியதால் பேருந்தில் இருந்தவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே  ஒரு பெண் உள்ளிட்ட 4 பேர் பலியாகினர்.

உயிரிழந்தவர்கள் அனைவரும் பேருந்தின் படிகட்டில் நின்று கொண்டு கம்பியைப் பிடித்துக் கொண்டிருந்ததால் மின்சாரம் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பேருந்தில் பயணித்த 48 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com