துறையூர்: பெருமாள்மலையில் வானவில் தந்த மகிழ்ச்சி

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பெருமாள்மலை அடிவாரம் பகுதியில் செவ்வாய்கிழமை காலை வானவில் தோன்றியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
துறையூர்: பெருமாள்மலையில் வானவில் தந்த மகிழ்ச்சி
துறையூர்: பெருமாள்மலையில் வானவில் தந்த மகிழ்ச்சி
Updated on
1 min read


துறையூர்: திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பெருமாள்மலை அடிவாரம் பகுதியில் செவ்வாய்கிழமை காலை வானவில் தோன்றியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

துறையூர் அருகில் 3 கிலோமீட்டர் தொலைவில் பெருமாள் மலை அடிவாரம் உள்ளது. இந்த மலையைச் சுற்றியுள்ள கிராமப் புற மற்றும் துறையூர் நகர மக்கள் கிரிவலப் பாதையிலும் மலையேறும் பாதையிலும் சுத்தமான காற்றை சுவாசித்தவாறு நடைப்பயிற்சி செய்து புத்துணர்வு பெறுவார்கள். பொதுவாக வறண்ட வானிலை நிலவும் துறையூர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக இங்கு  சிறு தூறல் முதல் லேசான மழை  பெய்து இந்தப் பகுதியை பகலிலும் குளிர்வித்து வருகிறது. இந்த நிலையில் பெருமாள் மலைப்பகுதியில் காலையில் சூரியன் உதிக்கும் வேளையில் வானவில் தோன்றியது. 

துறையூர் பகுதியில் வானவில் தோன்றுவதும், அத்தி கட்டி, ஆலங்கட்டி மழை பெய்வதும்  பல வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் அபூர்வ நிகழ்வு என்பதால் காலையில் தோன்றிய வானவில்லை நடைப் பயிற்சிக்கு சென்றவர்களும் குழந்தைகளும் பெருமாள்மலை சுற்றியுள்ள பொதுமக்களும் கண்டு மகிழ்ந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com