ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சங்ககிரி மேற்கு ஒன்றியத்தின் சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா 

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் அதிமுக மேற்கு ஒன்றியத்தின் சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

News image
சங்ககிரி வட்டம் தேவூர் மேற்கு ஒன்றிய அலுவலகம் அருகே கட்சி கொடியை ஏற்றி வைத்து பேசுகிறார் சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜா
Updated On :17 ஜனவரி 2021, 12:17 pm

DIN

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் அதிமுக மேற்கு ஒன்றியத்தின் சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜா, அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.வெங்கடாஜலம் ஆகியோர் தேவூர் மேற்கு ஒன்றிய அலுவலக வளாகத்தில் எம்.ஜி.ஆர் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும், அதிமுக கட்சி கொடியை ஏற்றி வைத்தனர். பின்னர் மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.வெங்கடாஜலம் காவேரிப்பட்டி அருகே உள்ள வட்ராம்பாளையத்தில் உள்ள எம்.ஜி.ஆர் முழு உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  

தேவூர் அருகே உள்ள காவேரிப்பட்டி, வட்ராம்பாளையத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அதிமுக பொதுக்குழு உறுப்பினர் கே.வெங்கடாஜலம் ஞாயிற்றுக்கிழமை மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

தேவூர் அருகே உள்ள காவேரிப்பட்டி, வட்ராம்பாளையத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அதிமுக பொதுக்குழு உறுப்பினர் கே.வெங்கடாஜலம் ஞாயிற்றுக்கிழமை மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

அதனையடுத்து அவர்  அரசிராமணி  குள்ளம்பட்டி, செட்டிப்பட்டி, புள்ளாகவுண்னம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கட்சி கொடியை ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.

மேற்கு ஒன்றியச் செயலர் சுந்தர்ராஜன், கிழக்கு ஒன்றிய துணைச்செயலர் மருதாஜலம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் ஏ.பி.சிவக்குமாரன், தங்காயூர் ஊராட்சி மன்றத்தலைவர் பாலாஜி, நிர்வாகிகள் குருசாமி, காளியப்பன், அரசு வழக்குரைஞர் ஆர்.சுப்ரமணி, சங்ககிரி இளைஞரணி நிர்வாகி கார்த்தி, மோகனராஜா, உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.