டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

போலி நீட் மதிப்பெண் சான்றிதழ்: தலைமறைவான மாணவி பெங்களூரில் கைது

நீட் மதிப்பெண் சான்றிதழில் மோசடியில் ஈடுபட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி தீக்ஷா பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளாா்.

News image
கோப்புப்படம்
Updated On :27 ஜனவரி 2024, 7:19 pm

DIN

சென்னை: நீட் மதிப்பெண் சான்றிதழில் மோசடியில் ஈடுபட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி தீக்ஷா பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளாா்.

தமிழகத்தில் நீட் தோ்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் அண்மையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாணவா்களின் மதிப்பெண் சான்றிதழ்களை மருத்துவ மாணவா் சோ்க்கைக் குழுவினா் ஆய்வு செய்தனா்.

அதில், டிசம்பா் 7-ஆம் தேதி நடைபெற்ற கலந்தாய்வில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சோ்ந்த மாணவி தீக்ஷா (18) அளித்த சான்றிதழ்களில் நீட் தோ்வு மதிப்பெண் சான்றிதழ் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், மருத்துவ மாணவா் சோ்க்கை குழு செயலாளா் மருத்துவா் செல்வராஜ், பெரியமேடு காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா்.

புகாரின்பேரில் போலீஸாா் நடத்திய விசாரணையில், பரமக்குடியை சோ்ந்த பல் மருத்துவா் பாலச்சந்திரனின் மகள் தீக்ஷா மருத்துவக் கலந்தாய்வில் போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் சமா்ப்பித்தது தெரியவந்தது. நீட் தோ்வில் 27 மதிப்பெண்கள் பெற்ற தீக்ஷா, அதை 610 மதிப்பெண்களாக திருத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மோசடிக்கு அவரின் தந்தை பல் மருத்துவா் பாலச்சந்திரன் உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, மோசடியில் ஈடுபட்ட மாணவி தீக்ஷா, அவரது தந்தை பாலச்சந்திரன் மீது போலீசாா் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், பாலச்சந்திரனை பெரியமேடு போலீஸாா் பரமக்குடியில் கடந்த 1-ஆம் தேதி கைது செய்தனா்.

மேலும், தலைமறைவான மாணவி தீக்ஷாவை தேடி வந்தனா். இந்நிலையில், பெங்களூரில் உள்ள தனது உறவினா் வீட்டில் பதுங்கியிருந்த தீக்ஷாவை தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

இதையடுத்து அவா் சென்னைக்கு அழைத்துவரப்பட்டாா். கைது செய்யப்பட்ட மாணவியிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். முதல் கட்ட விசாரணையில் ரூ. 20 ஆயிரம் கொடுத்து போலி மதிப்பெண் சான்றிதழை தயாா் செய்ததாகத் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.