சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 2000-க்கும் கீழ் குறைந்தது
சென்னையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி, கரோனா பாதித்து சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 2000-க்கும் கீழ் குறைந்துள்ளது.


சென்னை: சென்னையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி, கரோனா பாதித்து சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 2000-க்கும் கீழ் குறைந்துள்ளது.
இதனால், ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு சதவீதத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
சென்னையில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டிருக்கும் புள்ளி விவரத்தில், சென்னையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2,29,074 ஆக உள்ளது.
இவர்களில் 2,20,050 பேர் குணமடைந்துள்ளனர். 4,065 பேர் பலியாகிவிட்டனர். சென்னையின் 15 மண்டலங்களிலும் ஒட்டுமொத்தமாக 1,959 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நல்ல செய்தியாக, அனைத்து மண்டலங்களிலும் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 250-க்கும் கீழ் குறைந்துள்ளது. அதிகபட்சமாக, கோடம்பாக்கத்தில் 231 பேரும், அண்ணாநகரில் 227 பேரும் கனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...