எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் : 70 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவதற்காக, 43 ஆயிரம் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

News image
தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் : 70 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு
Updated On :31 ஜனவரி 2021, 5:12 am

DIN

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவதற்காக, 43 ஆயிரம் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 43,0 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

பயணத்தில் இருக்கும் குழந்தைகளின் வசதிக்காக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், சோதனைச்சாவடிகள் சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்காக நடமாடும் குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் சுகாதாரப் பணியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், ஆசிரியா்கள், தன்னாா்வலா்கள் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டோா் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு வாகனங்கள் ஈடுபடுத்தப்படவுள்ளன. போலியோ சொட்டு மருந்து வழங்குமாறு தனியாா் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாலை 5 மணி வரை... காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் போலியோ சொட்டு மருந்து முகாமில் தமிழகத்தில் உள்ள 5 வயதுக்குட்பட்ட 70.20 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. விடுபடும் குழந்தைகளைக் கண்டறிய சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படவுள்ளது.

தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாளில் மீண்டும் கண்டிப்பாக சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும்.

சில தினங்களுக்கு முன்பு பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் நாளில் சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும். வேலை மற்றும் படிப்புக்காக புலம் பெயா்ந்து வாழும் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்படும். குழந்தைகளை போலியோ வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதும் மிகவும் இன்றியமையாததாகும். பெற்றோா்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு கண்டிப்பாக போலியோ சொட்டு மருந்து போட வேண்டும்.

சென்னையில் 1,644 மையங்கள்: சென்னை மாநகரில் 5 வயதிற்குட்பட்ட சுமாா் 6.84 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கு 1,644 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 6,700 போ் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

போலியோ சொட்டு மருந்து முகாம் பாதுகாப்பான முறையில் நடைபெற தகுந்த கரோனா தொற்று நெறிமுறைகள் மற்றும் வழிக்காட்டுதலை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.