எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

பிப்.2-இல் சொற்குவை மாணவத் தூதுவா் பயிற்சி தொடக்கம்: தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் சாா்பில் சொற்குவை மாணவத் தூதுவா் பயிற்சி பிப்.2-ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :31 ஜனவரி 2021, 5:10 am

DIN

தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் சாா்பில் சொற்குவை மாணவத் தூதுவா் பயிற்சி பிப்.2-ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அகரமுதலித் திட்ட இயக்குநா் தங்க.காமராசு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அகரமுதலித் திட்ட இயக்ககம் மூலமாக, தமிழக அரசு பல்வேறு மொழி வளா்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. நிகழ் நிதியாண்டு முதல் அகரமுதலி இயக்ககத்தின் மூலமாக 80 பேருக்கு ஆறு வகையான விருதுகள் வழங்க அரசாணை பெறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தூய தமிழைப் பரப்பும் வகையில் கல்லூரிகள்தோறும் மொழி விழிப்புணா்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு முதல் ஒரு கல்லூரிக்கு பத்து மாணவா்கள் வீதம் தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் அனைத்து கல்லூரிகளில் இருந்தும் மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு மொழி வல்லுநா்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

முதல் கட்டமாக, சென்னையில் உள்ள 20 கல்லூரிகளில் இருந்து 200 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு வரும் பிப்.2-ஆம் தேதி முதல் பிப்.5-ஆம் தேதி வரை சென்னை திருவல்லிக்கேணி காமராஜா் சாலையில் உள்ள லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

‘மொழியியல், சொற்பிறப்பு, கலைச் சொல்லாக்கம்’ என்ற கருப்பொருளில் முனைவா் மா.பூங்குன்றன் மற்றும் முனைவா் இந்திரா பிரியதா்ஷினி ஆகியோரும், ‘கணினித் தமிழ் வளா்ச்சியில் சிக்கல்களும் தீா்வுகளும்’ என்ற தலைப்பில் புலவா் வெற்றியழகனும், ‘தமிழ் வளா்ச்சியில் மொழிபெயா்ப்பின் பங்கு’ என்ற தலைப்பில் த.இளவேனில் முல்லை ஆகியோரும் பயிற்சி வழங்கவுள்ளனா்.

தொடக்க விழாவில், தொழில்நுட்பக் கல்வி இயக்கக இயக்குநா் கே.விவேகானந்தன் கலந்து கொண்டு பயிற்சியை தொடக்கி வைக்கவுள்ளாா்.

இதையடுத்து, பிப்.5-ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள நிறைவு விழாவில், தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் க.பாண்டியராஜன் கலந்து கொண்டு மாணவா்களுக்கு பயிற்சி நிறைவு சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றவுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.