அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டும்தான்: கே.பி.முனுசாமி
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டும்தான் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.


அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டும்தான் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக-அமமுக இணைக்கப்படுமா என்கிற கேள்விக்கு கே.பி.முனுசாமி அளித்த பதிலில், டிடிவி தினகரன் மன்னிப்புக் கடிதம் தந்தால் அதுபற்றி தலைமை பரிசீலனை செய்யும்.
அதிமுகவுக்கு எதிராக செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு தினகரன் மன்னிப்புக் கடிதம் தர வேண்டும். அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டும்தான், மற்றவர்கள் சுயநலத்திற்காக கூறுகின்றனர்.
அதிமுகவில் இல்லாத சசிகலா, கட்சிக் கொடியை பயன்படுத்தியது கண்டனத்திற்குரியது. பல்வேறு கோணங்களில் அதிமுகவை கைப்பற்ற தினகரன் முயற்சி செய்து பார்த்தார்.
தன்னை காப்பாற்றிக்கொள்வதற்காக தன்பக்கம் இருப்பவர்களை ஏமாற்றி வருகிறார் டிடிவி.தினகரன். இவ்வாறு அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...