விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கம்பம், கூடலூரில் போலியோ சொட்டு மருந்து முகாம்

தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் நகராட்சி, ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து முகாம்  நடைபெற்றது.

News image
கம்பம், கூடலூரில் போலியோ சொட்டு மருந்து முகாம்
Updated On :31 ஜனவரி 2021, 5:28 am

DIN

தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் நகராட்சி, ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து முகாம்  நடைபெற்றது.

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி பகுதியில் பேருந்து நிலையம், சிக்னல், அரசமரம், வாரச்சந்தை வளாகம், உழவர் சந்தை வளாகம் மற்றும் அனைத்து ஊட்டச்சத்து, அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட 24 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைக்கப்பட்டது.

நகராட்சி ஆணையாளர் எம். சரவணக்குமார் குழந்தைக்கு சொட்டு மருந்து கொடுத்து தொடங்கி வைத்தார். சுகாதார அலுவலர் ஏ.அரசகுமார், ஆய்வாளர்கள் ஏ. சரவணன், எஸ்.திருப்பதி மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் செய்திருந்தனர்.

கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில்,  தமிழக கேரள எல்லை குமுளி, லோயர்கேம்ப், பளியர் குடி, தம்மனம்பட்டி உள்ளிட்ட 36 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைக்கப்பட்டது.

முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் பி.முருகன் சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார். 

காமம் கவுண்டன் பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சுதா முருகானந்தம் சித்த மருத்துவ அலுவலர் சிராஜ் தீன் ஆகியோர் தலைமையில் 25 இடங்களில் முகாம் நடைபெற்றது.

குள்ளப்பகவுண்டன்பட்டியில் பொன்னுத்தாய் குணசேகரன், கருநாக்கமுத்தன்பட்டியில் அ.மொக்கப்பன், சுருளிப்பட்டியில் நாகமணி வெங்கடேசன், நாராயணத்தேவன்பட்டியில் பொன்னுத்தாய்செல்லையா, ஆங்கூர்பாளையத்தில் சாந்தி பரமன் ஆகிய ஊராட்சி தலைவர்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து தொடங்கி வைத்தார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.