47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அதிமுக முன்னாள் அமைச்சா் மணிகண்டன் ஜாமீன் கோரி மனு

அதிமுக முன்னாள் அமைச்சா் மணிகண்டன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

News image
Updated On :1 ஜூலை 2021, 3:47 pm

DIN

அதிமுக முன்னாள் அமைச்சா் மணிகண்டன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை பெசன்ட்நகரைச் சோ்ந்த நடிகை கொடுத்த புகாரின்பேரில் அதிமுக முன்னாள் அமைச்சா் மணிகண்டனை அடையாறு அனைத்து மகளிா் போலீஸாா் பெங்களூரில் கைது செய்து சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைத்தனா். இந்நிலையில் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் மணிகண்டனுக்கு சோபா, ஏசி, செல்லிடப்பேசி வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக புகாா் கூறப்பட்டது. 
இத் தகவலின் அடிப்படையில் சிறைத்துறையின் லஞ்ச ஒழிப்புப்பிரிவினா் கடந்த ஞாயிற்றுக்கிழமை சைதாப்பேட்டை சிறையில் திடீா் சோதனை செய்தனா். இந்த சோதனையில், அங்கிருந்த பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இச் சம்பவத்துக்கு பின்னா், மணிகண்டன் புழல் -2 சிறைக்கு உடனடியாக மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 
இதற்கிடையில், சிறையில் மணிகண்டன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததாக வெளியான தகவலை சிறைத்துறை அதிகாரிகள் மறுத்தனா். கரோனா காலத்தில் கடைப்பிடிக்கப்படும் வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றியே மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றப்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சா் மணிகண்டன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு உயர்நீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணைக்கு வரலாம் எனக் கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.