சீர்காழி வட்டம், புதுப்பட்டினம் ஊராட்சி பழையார் மீனவர்கள் செல்வராஜ் மகன் மதி (55) , பெரிய மதி மகன் ஹரிஸ் (22) , அய்யா கண்ணு மகன் நகுலன், வேலுநாடார் மகன் முத்தையா (60), வீரப்பன் மகன் ராஜதுரை (45) ஆகிய 5 பேரும் சேதுராஜன் என்பவருக்கு சொந்தமான பெரிய விசை படகில் சனிக்கிழமை காலை 3 மணியளவில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். மூன்றரை கி.மீ கடல் நாட்டி கல் தூரத்திற்கு சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, திடீரென விசைப்படகு கடலில் மூழ்க தொடங்கியது. இதில் படகில் இருந்த ஐந்து மீனவர்களும் கடலில் விழுந்து தத்தளித்தனர்.