கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் கோரையாற்றில் தண்ணீர் அதிக அளவில் ஓடுவதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
கூத்தாநல்லூர் கோரையாற்றில் தூர் வாரப்பட்டு, ஆழப்படுத்தப்பட்டது. மேலும், இருபுறங்களிலும் கரைகள் உயர்த்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் அதிக அளவில் கரை புரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது. ஏற்கெனவே ஊரடங்கின் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் வீடுகளில் இருப்பதால், அநேக நேரங்களில் ஆற்றுக்கு நண்பர்களுடன் குளிக்கச் செல்கின்றனர். இதில், நீச்சல் தெரியாதவர்கள் ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழக்க நேரிடுகிறது.
கடந்த ஆண்டு பொறியியல் மாணவர், 3 ஆம் வகுப்பு சிறுவன், 10 வயது மாணவர் என மூவர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மேலும், விவசாய தொழிலாளர்கள் சங்க நகரச் செயலாளர் மகன், ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டு பின்னர் காப்பாற்றப்பட்டார்.
தற்போது, கோரையாற்றில் வெள்ளம் போல், தண்ணீர் கரை புரண்டு ஓடுவதால், கரையோரத்தில் வசிப்பவர்களும் ஆற்றில் குளிக்கச் செல்பவர்களும் கவனமாக செயல்பட வேண்டும் என வருவாய் துறை சார்பில்,எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இம்பாக்ட் வீரராக களமிறக்கப்பட்ட ஷர்துல் தாக்குரின் வித்தியாசமான சாதனை..! கோபத்தில் மும்பை ரசிகர்கள்!

காங்கிரஸ் பயிற்சி முகாமில் ராகுல் பங்கேற்பு!

மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
சர்வதேச பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான்: ராஜ்நாத் சிங்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


