மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி
கரோனா பொதுமுடக்கத்தில் இருந்து தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், வரும் மாதங்களில் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.


சென்னை: கரோனா பொதுமுடக்கத்தில் இருந்து தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், வரும் மாதங்களில் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். டெங்கு ஒழித்ததுபோல் கரோனாவை ஓழிக்க செயல்பட வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கரோனா பொதுமுடக்கத்தில் இருந்து தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் கரோனா தடுப்பு விதிகளை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.
கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்புகள் மறைக்கப்படுவதாகவும், குறைத்து காட்டுவதாக கூறுவது தவறான குற்றச்சாட்டு. கரோனா உயிரிழப்புகளை தமிழக அரசு மறைக்கவில்லை. மறைப்பதற்கான அவசியமும் இல்லை.
கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி: தமிழகத்தில் சனிக்கிழமை முதல் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. வரும் வாரங்களில் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கவனமின்றி செயல்படக் கூடாது. கரோனா நமக்கு இல்லை என்றும் எண்ணிவிடக் கூடாது.
பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது. முகக் கவசம் அணிதல், கைகழுவுதல், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல் போன்றவை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
டெங்குவை எப்படி ஒழித்தமோ அதேபோன்று கரோனா பெருந்தொற்றையும் ஒழிக்க செயல்பட வேண்டும். டெல்டா பிளஸ் மட்டுமின்றி அனைத்து வகையான தொற்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்து கண்காணிக்கப்படும் என்று ராதாகிருஷ்ணன் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...