தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சதுரகிரி மலை செல்ல பக்தர்களுக்கு அனுமதி

ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு வருகிற 7 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :5 ஜூலை 2021, 11:21 am

DIN

ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு வருகிற 7 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை மட்டும் சதுரகிரி மலை செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

கரோனா இரண்டாவது அலை காரணமாக அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பக்தா்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது பாதிப்பு குறைந்துள்ளதையடுத்து வழிகாட்டு நெறிமுறைகளுடன் வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வருகிற 7 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு நான்கு நாள்களுக்கு மட்டும் காலை 7 மணி முதல் 1 மணி வரை மலை ஏறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.