‘எங்களிடம் சொகுசு கார்கள் இல்லை; ஒரேயொரு ஆடி கார்தான் உள்ளது’: மதன் மனைவி

மதனிடம் சொகுசு கார்கள் இல்லை, ஒரே ஒரு ஆடி ஏ6 வகை கார் தான் உள்ளதாக பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
‘எங்களிடம் சொகுசு கார்கள் இல்லை; ஒரேயொரு ஆடி கார்தான் உள்ளது’: மதன் மனைவி

மதனிடம் சொகுசு கார்கள் இல்லை, ஒரே ஒரு ஆடி ஏ6 வகை கார் தான் உள்ளதாக பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

சிறுவர், சிறுமியரிடம் ஆபாசமாகப் பேசி விடியோக்களை வெளியிட்ட பப்ஜி மதன் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நிலையில், அவர்மீது இன்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மதனின் மனைவி கிருத்திகா பேசியதாவது,

எனது கணவர் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளார் எனக் கூறப்படுவது உண்மையல்ல. நாள்தோறும் யூடியூபில் 20 மணிநேரம் வேலை பார்த்து அவர் சம்பாதித்துள்ளார். நாங்கள் வாடகை வீட்டில் குடியிருக்கும் நிலையில் எங்களது அனைத்து டெபிட், கிரெடிட் கார்டுகளும் முடக்கப்பட்டுள்ளது.

யூடியூபில் இருந்த வந்த பணத்தை வைத்து 2 சொகுசு கார்கள் வாங்கினோம் என்பது உண்மையல்ல. என் கணவரிடம் ஒரே ஒரு ஆடி ஏ6 கார் மட்டுமே உள்ளது. 

மேலும், மதன் நடத்திய யூடியூப் சேனல்களுக்கு நான் அட்மின் இல்லை. அதில் ஆபாசமாக பேசும் குரல் என்னுடையது இல்லை. மதனின் யூடியூபில் என்னுடைய வங்கி கணக்கு இணைக்கப்பட்டிருந்த காரணத்தால் மட்டுமே நான் கைது செய்யப்பட்டு காவலில் இருந்தேன் என விளக்கம் அளித்துள்ளார்.

பொறியியல் பட்டதாரியான மதன்குமார் தடை செய்யப்பட்ட பப்ஜி ஆன்லைன் விளையாட்டை தனது யூடியூப் சேனலில் தொடா்ந்து நடத்தி வந்தார். அந்த சேனலில் பெண்கள் குறித்து ஆபாசமாக பேசி பதிவுகளை மதன்குமார் வெளியிட்டு வந்தார். இதன் மூலம் லட்சக் கணக்கில் பணம் சேர்ந்தது.

இதுதொடா்பாக காவல் துறையினரிடம் புகாா் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் பேரில் மதன்குமாா் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் 18 -ஆம் தேதி கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி மதனை சிறையில் அடைத்தனா். இந்த வழக்கில் ஜாமீன் கோரி மதன் தாக்கல் செய்த மனுவை சைதாபேட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அதனை அடுத்து சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மதன் மனு தாக்கல் செய்தாா். 

இந்நிலையில், ஆபாசமாக பேசி விடியோக்களை வெளியிட்ட பப்ஜி மதன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதற்கிடையே பப்ஜி மதனின் யூடியூப் சேனல்களுக்கு அட்மினாக செயல்பட்ட அவரது மனைவி கிருத்திகாவும் கைது செய்யப்பட்டு ஜாமினில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com