தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நாட்டிற்கு இதனால் ஆகப்போவதென்ன? மத்திய அமைச்சரவை விரிவாக்கம் குறித்து கமல் விமர்சனம்

மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தால் நாட்டிற்கு ஆகப்போவதென்ன? என மக்கள்நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

News image

நாட்டிற்கு இதனால் ஆகப்போவதென்ன? மத்திய அமைச்சரவை விரிவாக்கம் குறித்து கமல் விமர்சனம்

Updated On :7 ஜூலை 2021, 1:49 pm

DIN

மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தால் நாட்டிற்கு ஆகப்போவதென்ன? என மக்கள்நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து புதன்கிழமை தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா, அசாம் முன்னாள் முதல்வர் சர்பானந்த சோனோவால், கிஷண் ரெட்டி, அனுராக் சிங் தாக்குர், ஹர்தீப் சிங் புரி உள்ளிட்ட 43 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.  

இந்நிலையில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் குறித்து மக்கள்நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில், “தமிழகத்திற்கு ஒரு மத்திய அமைச்சர் கிடைத்திருக்கிறார் என்று மகிழ முடியாதபடி இருக்கிறது அமைச்சரவை விரிவாக்கம். நாடு அனைத்துத் துறைகளிலும் பின்னடைந்திருக்கிறது. இந்தச் சரிவிலிருந்து மீளும் நோக்கத்தில் அமைச்சரவை மாற்றம் நடந்திருக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு ஒரு மத்திய அமைச்சர் கிடைத்திருக்கிறார் என்று மகிழ முடியாதபடி இருக்கிறது அமைச்சரவை விரிவாக்கம். நாடு அனைத்துத் துறைகளிலும் பின்னடைந்திருக்கிறது. இந்தச் சரிவிலிருந்து மீளும் நோக்கத்தில் அமைச்சரவை மாற்றம் நடந்திருக்கவேண்டும். (1/2)

உள்கட்சித் தலைவர்கள், வேறு கட்சிகளிலிருந்து இணைந்தவர்கள், வரவிருக்கிற மாநில தேர்தல்கள் ஆகியவற்றை மனதில் வைத்து நடந்திருக்கும் இந்த விரிவாக்கம் பாஜகவிற்கு வேண்டுமானால் நன்மை பயக்கலாம். நாட்டிற்கு இதனால் ஆகப்போவதென்ன? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.