சீர்காழி: கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரஸார் நூதன ஆர்ப்பாட்டம்
சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகரத் தலைவர் லட்சுமணன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் அன்பு, பாலகுரு, இளைஞர் காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் மணிவண்ணன் பங்கேற்று பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தின்போது கேஸ் சிலிண்டர்களுக்கு மாலை அணிவித்தும், இருசக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்தும் நூதன முறையில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...