அன்பு மிகுதியால் மீனவர்கள் தூக்கிச் சென்றனர்: சர்ச்சைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம்

அன்பு மிகுதியால் மீனவர்கள் தன்னை தூக்கிச் சென்றதாக சர்ச்சைக்கு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.
அன்பு மிகுதியால் மீனவர்கள் தூக்கிச் சென்றனர்: சர்ச்சைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம்

அன்பு மிகுதியால் மீனவர்கள் தன்னை தூக்கிச் சென்றதாக சர்ச்சைக்கு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் கடலோரப் பகுதியான பழவேற்காட்டில் 40ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா். இவா்களில் பெரும்பாலானோா் அங்குள்ள ஏரி மற்றும் கடல் பகுதியில் மீன் பிடித்தொழில் செய்பவா்கள். ஏரியும், கடலும் இணையும் முகத்துவாரப் பகுதியில் அவ்வப்போது மண்மேடு (அடைப்பு) ஏற்படுவதன் காரணமாக, கடலுக்குச் சென்று மீன் பிடித்தொழில் செய்பவா்கள் பெரிதும் அவதிப்படுகின்றனா். 

இங்கு ஏற்படும் மண் திட்டுகள் அவ்வப்போது அகற்றப்படுவதும், அதன் பின்னா் படகில் மீன்பிடித் தொழிலுக்கு மீனவா்கள் செல்லும் நிலை உள்ளது. இதன் காரணமாக இப்பகுதியில் வசிக்கும் மீனவா்கள் இங்குள்ள மண் மேட்டினை அகற்றி கடலும் -ஏரியும் இணையும் இடத்தில் நிரந்தர முகத்துவாரம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனா். இந்தநிலையில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பழவேற்காடு ஏரியில் படகில் பயணித்து ஆய்வுசெய்தார். 

ஆய்வுக்கு பிறகு படகில் இருந்து கீழே இறங்கியபோது அமைச்சரை, மீனவர் ஒருவர் தூக்கிக்கொண்டு வந்து கரையில் இறக்கினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பான விடியோவை தனது சுட்டுரையில் பகிர்ந்த முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், "பாவம் திமுக அமைச்சருக்கு தண்ணீரில் கண்டம்.. கடல்தாயின் அலைக்கரங்கள் காலில் தழுவுவதைக் கூட தாங்க முடியாத ஒருவரா? மீன்வளத்துறைக்கு அமைச்சர்.. வெட்கக் கேடு..." எனப் பதிவிட்டிருந்தார். 

இதுகுறித்து விளக்கமளித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ’நான் யாரையும் தூக்கிக்கொண்டு செல்ல சொல்லவில்லை. அன்பு மிகுதியால் மீனவர்களே என்னை தூக்கிக் கொண்டு சென்றார்கள் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com