எல். முருகனுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து
மத்திய இணையமைச்சராக பதவியேற்றுள்ள எல். முருகனுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து கூறியுள்ளார்.


மத்திய இணையமைச்சராக பதவியேற்றுள்ள எல். முருகனுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து கூறியுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் 7 பெண் அமைச்சர்கள் உள்பட 43 பேர் அமைச்சராகப் பொறுப்பேற்றனர். இதில், தமிழக பாஜக தலைவராக இருந்த எல். முருகனுக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டுள்ளது. இணையமைச்சராகப் பொறுப்பேற்ற அவருக்கு தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடைத்துறை மற்றும் பால்வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மத்திய இணையமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள எல். முருகனுக்கு அரசியல் தலைவர்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தும் எல். முருகனுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், மத்திய மந்திரியாக பதவியேற்ற தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கு தேமுதிக சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எல்.முருகன், தமிழகத்திற்கு வேண்டிய அனைத்து நலன்களையும் மத்திய அரசிடம் கேட்டு பெற்று தமிழகத்தை முன்னேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...