ரயிலில் கொண்டு சென்ற 144 கிலோ வெள்ளி, ரூ.35 லட்சம் பறிமுதல்: 4 பேர் கைது
காட்பாடி வழியாக சென்ற ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1.05 கோடி மதிப்புள்ள 144 கிலோ வெள்ளிக் கட்டிகள், ரூ. 35 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை ரயில்வே பாதுகாப்புப் படை கைப்பற்றியுள்ளனர்.


வேலூர்: காட்பாடி வழியாக சென்ற ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1.05 கோடி மதிப்புள்ள 144 கிலோ வெள்ளிக் கட்டிகள், ரூ. 35 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை ரயில்வே பாதுகாப்புப் படை கைப்பற்றியதுடன் இதுதொடர்பாக 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் செல்லும் விரைவு ரயில் வெள்ளிக்கிழமை காலை காட்பாடி ரயில் நிலையம் வந்தது. அப்போது காட்பாடி ரயில்வே பாதுகாப்புப் படை குற்றப்புலனாய்வு துறையினர் ரயிலில் சோதனை செய்தனர்.
ரயிலில் சந்தேகத்திற்கிடமாக பயணித்த நான்கு பேரை பிடித்து, அவர்களிடம் சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இல்லாமல் சுமார் ரூ.1 கோடியே 5 லட்சம் மதிப்பிலான 144 கிலோ வெள்ளிக்கட்டி, நகைகள், ரூ.32 லட்சம் பணம் இருப்பது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து சேலத்தை சேர்ந்த சதீஷ் குமார், நித்தியானந்தம், பிரகாஷ், சுரேஷ் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். தற்போது சென்னை வருமான வருத்துறையினரிடம் ஒப்படைக்க உள்ளனர். முதற்கட்ட விசாரணையில் பிடிபட்ட நான்கு பேரும் நகை வியாபாரிகள் என தெரியவந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...