
நாகப்பட்டினம்: நாகையில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக்கொலை செய்யப்பட்டது சனிக்கிழமை தெரியவந்தது.
நாகை, மருந்துக் கொத்தளத்தெரு, கொடிமரத்து சந்துப்பகுதியைச் சேர்ந்தவர் முத்தையன். இவரது மகன் பிரகாஷ் (40). ஆட்டோ ஓட்டுநரான இவர், வெள்ளிக்கிழமை இரவு தனது வீட்டின் அருகாமையில் நண்பர்களுடன் மருந்து அருந்தியுள்ளார். அப்போது தன்னுடன் மது அருந்திய சிவா என்பவரை பிரகாஷ் தாக்கினாராம். இதனால், அவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரகாஷ் தனது வீட்டில் முகம் மற்றும் உடலில் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தது சனிக்கிழமை தெரியவந்தது.
இதுத் தொடர்பாக, நாகை கல்லார் பகுதியைச் சேர்ந்த பேட்டரி சூர்யா(24) நாகையைச் சேர்ந்த சிவபவித்ரன்(24) மருந்துக்கொத்தளரோடு, அமராவதி காலனியைச் சேர்ந்த பக்கிரிசாமி மகன் ஆனந்த்(27) ஆகியோரை நாகை நகர காவல் நிலையப் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.