சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

மேக்கேதாட்டு அணை விவகாரம்: அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடங்கியது!

மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

News image
Updated On :12 ஜூலை 2021, 5:19 am

DIN

மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டு வருகிறது. தமிழக அரசு தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

மேக்கேதாட்டு பகுதியில் கட்டாயம் அணை கட்டப்படும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா சமீபத்தில் கூறிய நிலையில், இதுதொடர்பாக  நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தில்லி சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து, 'மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி வழங்கக்கூடாது' என்று வலியுறுத்தினார். 

அணையைக் கட்ட கர்நாடக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு எதிர்க்கும் என்றும் அமைச்சர் துரைமுருகன் கூறியிருந்தார். 

இந்நிலையில் மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். 

அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியுள்ளது. இதில் தமிழக சட்டப்பேரவையில் உள்ள 13 கட்சிகளின் உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர். 

திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, டி.ஆர்.பாலு, அதிமுக சார்பில் ஜெயக்குமார், மனோஜ் பாண்டியன், காங்கிரஸ் சார்பில் கே.எஸ்.அழகிரி, செல்வப்பெருந்தகை விசிக சார்பில் திருமாவளவன், ரவிக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கே. பாலகிருஷ்ணன், பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், வி.பி.துரைசாமி, தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி ஈஸ்வரன், புரட்சி பாரதம் பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.