திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சென்னையில் இதுவரை 27.44 லட்சம் பேருக்கு தடுப்பூசி: நேற்று மட்டும்?

சென்னையில் புதன்கிழமை காலை நிலவரப்படி இதுவரை 27.44 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

News image
சென்னையில் இதுவரை 27.44 லட்சம் பேருக்கு தடுப்பூசி: நேற்று மட்டும்?
Updated On :14 ஜூலை 2021, 7:57 am

DIN


சென்னையில் புதன்கிழமை காலை நிலவரப்படி இதுவரை 27.44 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ஆரம்பத்தில், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்களிடையே தயக்கம் இருந்த நிலையில், சுகாதாரத் துறையினர் ஆங்காங்கே முகாம்களை அமைத்து, மக்களுக்கு தடுப்பூசியை செலுத்தி வந்தனர்.

தற்போது, கரோனா தடுப்பூசி மீதான எண்ணம் மக்களிடையே மாறியதால், பல இடங்களில் அதிகாலை முதலே வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால், எதிர்மறையாக, எங்குமே தடுப்பூசி கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.

போதிய தடுப்பூசி இருப்பு இல்லாததால் பல இடங்களில் முகாம்கள் ரத்து செய்யப்படுவது கடந்த சில நாள்களாகவே நடந்து வருகிறது.

இந்த நிலையில், ஜூலை 13ஆம் தேதி வரை சென்னையில் 27,44,261 கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், ஜூலை 13ஆம் தேதி மட்டும் 20,632 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.