ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

தூத்துக்குடிக்கு வந்த  நீர்மூழ்கிக் கப்பல்

தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள ஐ.என்.எஸ். கட்டபொம்மன் கடற்படைக்கான கப்பல் தளத்தில் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. 

News image
Updated On :18 ஜூலை 2021, 8:11 am

DIN

தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள ஐ.என்.எஸ். கட்டபொம்மன் கடற்படைக்கான கப்பல் தளத்தில் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. 

சமீப காலமாக வங்காள‌விரிகுடா பெருங்கடலில் இலங்கையையொட்டி சீனா தனது கடற்படை பலத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளதாக தகவல்கள் கசிந்தன. இது சீனா-இந்தியா போர் பதற்றத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கையாக பார்க்கப்பட்டது.

Story image

இதையொட்டி, இந்தியத் தரப்பிலும் ராணுவ வலிமையை அதிகரிக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, நாட்டின் அனைத்து எல்லைகளிலும் பீரங்கிகள், அதிநவீன போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், விமானம் தாங்கிக் கப்பல்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதில் ஒருபகுதியாக இந்திய கடற்படைக்குச் சொந்தமான அதிநவீன நீர்மூழ்கி கப்பல் "சிந்துஷாஸ்ட்ரா" தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள ஐ.என்.எஸ். கட்டபொம்மன் கடற்படைக்கான கப்பல் தளத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. கப்பலில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக்கோளாறை சரிசெய்யவும், பெட்ரோல், டீசல் மற்றும் அடிப்படைத் தேவையான தண்ணீர் நிரப்புவதற்காகவும் நீர்மூழ்கி கப்பல் தூத்துக்குடி கப்பல்தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Story image

மேலும், நடுக்கடலில் போர் ஒத்திகைக்காகவும் இந்த 'சிந்துஷாஸ்ட்ரா' நீர்மூழ்கிக் கப்பல் வந்திருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கப்பல் ஒரு வார காலம் தூத்துக்குடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு பணிகளை மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது. தூத்துக்குடி துறைமுகத்தில் நீர்மூழ்கிக்  கப்பல் நிலை நிறுத்தப்பட்டுள்ள தகவல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.