அமைச்சர் துரைமுருகன் மீது வன்கொடுமைப் புகார்
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மீது சாதிய வன்கொடுமை புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் துரைமுருகன் மீது வன்கொடுமைப் புகார்

அமைச்சர் துரைமுருகன் மீது வன்கொடுமைப் புகார்
வேலூர்: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மீது சாதிய வன்கொடுமை புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விளக்கம் அளிக்க வேலூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் சேர்க்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மீது தில்லியிலுள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில், நில அபகரிப்பு, சாதிய வன்கொடுமை தொடர்பாக புகார் அளித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஆகஸ்ட் 6-ஆம் தேதி வேலூர் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி 15 நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும் ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சுப்பிரமணியின் புகாரில், அமைச்சர் துரைமுருகனின் உறவினர்கள் சிலரது பெயர்களும் இடம் பெற்றுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...