தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

குமுளி மலைச்சாலையில் பேரிடர் மீட்புக் குழுவினர் ஆய்வு

தேனி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் புதன்கிழமை குமுளி மற்றும் கம்பம்மெட்டு மலைச்சாலைகளில் ஆய்வு  நடத்தினர்.

News image
Updated On :21 ஜூலை 2021, 11:21 am

DIN

கம்பம்: தேனி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் புதன்கிழமை குமுளி மற்றும் கம்பம்மெட்டு மலைச்சாலைகளில் ஆய்வு  நடத்தினர்.

தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் தேனி மாவட்டத்தில் தமிழக- கேரள எல்லைப் பகுதிகளில் குறிப்பாக மலைச்சாலைகளில் இயற்கை சேதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதனை முன்னிட்டு தேனி மாவட்டத்திற்கு ராணிப்பேட்டை பட்டாலியனைச் சேர்ந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்  ஆய்வாளர் கணேஷ் பிரசாத் தலைமையில் 21 வீரர்கள் வருகை தந்துள்ளனர்.

இவர்கள் குமுளி மற்றும் கம்பம்மெட்டு மலைச்சாலைகளில் மழைக் காலங்களில், பாறை,  மண் போன்றவைகள் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்று ஆய்வு செய்து அதனை முன்கூட்டி தடுப்பதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதற்கு அறிக்கை தயார் செய்தனர்.

மேலும் மலைச்சாலைகளில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளையும், அதனை ஒட்டியுள்ள மலைப்பகுதிகளில் நேரில் சென்று பார்வையிட்டனர்.

இவர்களுடன் தாசில்தார் உதயராணி,  வருவாய் ஆய்வாளர் ஹெச்.செந்தில்குமார் மற்றும் காவல்துறையினர் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.