ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

தூத்துக்குடியில் மீன்பிடிக்கச் சென்ற 3 மீனவர்கள் மாயம்: தேடும் பணி தீவிரம்

தூத்துக்குடி இனிகோ நகர் கடற்பகுதியில் இருந்து பைபர் படகில்  மீன்பிடிக்கச் சென்ற 3 மீனவர்கள் மாயமானதை அடுத்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ரோந்து படகில் மாயமான  மீனவர்களை தேடி வருகின்றனர்.

News image
கோப்புப்படம்
Updated On :21 ஜூலை 2021, 7:28 am

DIN

தூத்துக்குடி இனிகோ நகர் கடற்பகுதியில் இருந்து பைபர் படகில்  மீன்பிடிக்கச் சென்ற 3 மீனவர்கள் மாயமானதை அடுத்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ரோந்து படகில் மாயமான  மீனவர்களை தேடி வருகின்றனர்.

தூத்துக்குடியை  சேர்ந்த பிரமிளா என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 19ஆம் தேதி இரவு இனிகோ நகர்  பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ்,  தமிழ்,  பெரியதாழை சேர்ந்த ஜான் பால்,  ஆகிய மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றனர்.  இந்நிலையில் செவ்வாய்க்கிழமை கரை திரும்பாததால் மீனவர்கள் குடும்பத்தினர் அச்சம் அடைந்தனர். 

இதையடுத்து மீனவர்களின் உறவினர்கள் மற்றும் இனிகோ நகர்  மீன்பிடி சங்கத்தினர் மீன்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து மாயமான 3 மீனவர்களையும் இனிகோ நகர் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் பைபர் படகுகள் மூலம் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ரோந்து படகில் மாயமான மீனவர்களை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.