சிங்காரச் சென்னை: அல்லிக்குள ஆக்கிரமிப்பும் அடாத செயல்களும்
பெருநகரங்களில் பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருக்கும் பல வணிக வளாகங்கள் இரவில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோரின் கூடாரங்களாக மாறுவது கவலையளிக்கிறது.


பெருநகரங்களில் பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருக்கும் பல வணிக வளாகங்கள் இரவில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோரின் கூடாரங்களாக மாறுவது கவலையளிக்கிறது.
இத்தகைய வளாகங்களில் எல்லை மீறிய ஆக்கிரமிப்புகளால் தொல்லை கொடுப்பவர்களும் அதிகரித்து வருவதால் பொதுமக்களும் வியாபாரிகளும் அதிகம் பாதிப்படைந்து வருகிறார்கள்.
சென்னையில் புகழ்பெற்ற மூர் மார்கெட் பகுதியில் இயங்கிவரும் அல்லிக்குளம் வணிக வளாகம் முழுக்க குப்பைகள்தான் நிறைந்துகிடக்கின்றன.
இரவில் கஞ்சா, குடி, பாலியல் தொழில் போன்ற சமூக விரோதச் செயல்களை ஈடுபடுவோரின் புகலிடமாக மாறிவருவது இங்கிருக்கும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

குப்பைகளும் , பழைய பொருள்களும் நிறைந்த பகுதி
மலைபோல கொட்டிக் கிடக்கும் குப்பைகளிலிருந்து நோய்கள் பரவும் வாய்ப்பு இருப்பதையும் தாண்டி இங்கே வேறுவழியில்லாமல் கடைக்காரர்கள் வியாபாரம் செய்து வருகிறார்கள்.

போதைப் பொருள்களின் குப்பை சூழ்ந்த கடை
இதுகுறித்து, 15 ஆண்டுகளாக அல்லிக்குள வணிக வளாகத்தில் வியாபாரம் செய்யும் ஆறுமுகம் கூறுகையில், "10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து சிலர் வளாகத்தின் நுழைவுப் பகுதியை அடைத்துக்கொண்டு உணவுகளையும் பழைய பொருள்களையும் வியாபாரம் செய்வதோடு இங்கேயே குளிப்பதும் சமைப்பதும் துணி துவைப்பதுமாக இருக்கின்றனர். இந்தப் பகுதியையே சுகாதாரமற்ற முறையில் வைத்திருக்கும் இவர்களைத் தட்டிக் கேட்கச் செல்பவர்களையும் கும்பலாகச் சேர்ந்து தாக்க வருகிறார்கள். மேலும் இதுகுறித்து பலமுறை மண்டல அதிகாரிகளிடம் நேரிலும் எழுத்துபூர்வமாகவும் புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை" என்றார்.

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடம்
உடனடியாக மாநகராட்சி இந்த வளாகத்தை மீட்டு, வணிகத்துக்கு உகந்ததாக மாற்றித் தர வேண்டும் எனவும் இரவு 8 மணிக்கு மேல் தேவையற்றவர்கள் உள்ளே நுழைவதை தடுக்க வேண்டும் என்றும் முக்கியமாக, குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என்பதும் அல்லிக்குள வியாபாரிகளின் பெரிய கோரிக்கைகளாக இருக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...