ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

காங்கயம் அருகே அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

திமுக அரசைக் கண்டித்து காங்கயம் அருகே, அதிமுகவினர் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :28 ஜூலை 2021, 6:55 am

DIN

காங்கயம்: திமுக அரசைக் கண்டித்து காங்கயம் அருகே, அதிமுகவினர் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கயம் ஒன்றியம், ஆலாம்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட நெய்க்காரன்பாளையம் பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அதிமுக காங்கயம் ஒன்றியச் செயலர் என்.எஸ்.என்.நடராஜ் தலைமை வகித்தார்.

இதில், நீட் தேர்வை ரத்து செய்வதாகக் கூறி தேர்தல் பிரசாரத்தில் பொய் வாக்குறுதியளித்து மாணவர்களை ஏமாற்றிய திமுக அரசைக் கண்டித்து, முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மேலும், இதே வாக்குறுதியைக் கண்டித்து, அதிமுக கட்சியின் சார்பில் காங்கயம் ஒன்றியத்தில் உள்ள 15 ஊராட்சிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அப்பகுதிகளைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.