டிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர்

தமிழகத்தில் 50,000 அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கு ரூ.34.78 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

News image

அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர்

Updated On :30 ஜூலை 2021, 9:41 am

DIN

தமிழகத்தில் 50,000 அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கு ரூ.34.78 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (30.7.2021) சென்னை, இராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தமிழ்நாடு அமைப்புசாராத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில் 50,000 அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கு 34 கோடியே 78 இலட்சத்து 88 ஆயிரத்து 950 ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

உடலுழைப்புத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால், 17.03.1999 அன்று தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்பு நலவாரியம் உருவாக்கப்பட்டு, தொடர்ந்து 2006 முதல் 2011 வரையிலான ஆட்சிக் காலத்தில் 15 தனி நலவாரியங்கள் உருவாக்கப்பட்டன. மேலும், அமைப்புசாராத் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பதிவு மற்றும் புதுப்பித்தலின் போது வசூலிக்கப்பட்ட கட்டணங்கள் 1.09.2006 முதல் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.

அமைப்புசாராத் தொழிலாளர்களின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு அவர்களுக்குப் பதிவுசெய்தல், புதுப்பித்தல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு ஏதுவாக 01.11.2008 முதல் மாவட்டங்கள் தோறும் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகங்கள் தொடங்கப்பட்டதுடன், 15.09.2009 முதல் இணையதளம் வாயிலாக அமைப்புசாராத் தொழிலாளர்கள் எளிய முறையில் பதிவு செய்யவும், புதுப்பிக்கவும் மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு ஏதுவாகவும் வழிவகை செய்யப்பட்டது.

விழாவில், தமிழக முதல்வர், 18 அமைப்புசாராத் தொழிலாளர் நலவாரியங்களில் பதிவுசெய்துள்ள 50,000 தொழிலாளர்களுக்கு, 10 கோடியே 69 இலட்சத்து 86 ஆயிரத்து 950 ரூபாய்க்கான திருமண நிதியுதவி, மகப்பேறு நிதியுதவி, கல்வி உதவித்தொகை, கண்கண்ணாடி, ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும், ஓய்வூதிய நிலுவைத் தொகையாக 24 கோடியே 9 இலட்சத்து 2 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் 34 கோடியே 78 இலட்சத்து 88 ஆயிரத்து 950 ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.