எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசின் முடிவுக்கு நன்றி: கனிமொழி எம்.பி.

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தியை நீட்டிக்கத் தேவையில்லை என்ற தமிழக அரசின் முடிவுக்கு நன்றி என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். 

News image

கோப்புப்படம்

Updated On :30 ஜூலை 2021, 9:18 am

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தியை நீட்டிக்கத் தேவையில்லை என்ற தமிழக அரசின் முடிவுக்கு நன்றி என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய உச்சநீதிமன்றம் அளித்த கால அவகாசம் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில், கால நீட்டிப்பு கேட்டு வேதாந்த நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தது.

இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில், தற்போது ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லாததால் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆக்ஸிஜன் உற்பத்தி கால அவகாசம் நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தமிழக அரசின் முடிவுக்கு நன்றி தெரிவிப்பதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'தமிழ்நாட்டு மக்களின் உணர்வை பிரதிபலிக்கும் விதமாக இனி ஒருபோதும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இயங்காது என்ற உறுதிமொழியை காப்பாற்றிய தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி. 

தமிழ்நாட்டில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை, எனவே, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்ஸிஜன் உற்பத்தியை நீட்டிக்க வேண்டியதில்லை, என்ற தமிழ்நாடு அரசின் முடிவிற்கு நன்றி' என்று குறிப்பிட்டுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.