புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

போதிய அளவிலான தடுப்பூசியை ஒதுக்குக: மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை ஒதுக்க வலியுறுத்தி மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். 

News image

மு.க.ஸ்டாலின் / ஹர்ஷ் வர்தன்

Updated On :2 ஜூன் 2021, 7:48 am

DIN

தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை ஒதுக்க வலியுறுத்தி மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். 

இது தொடர்பாக மத்திய அமைச்சருக்கு முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மத்திய அரசிடமிருந்து போதிய அளவில் தடுப்பூசிகள் வரப்பெறவில்லை. 

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை உடனே பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். 

தமிழக மக்கள் தொகை, கரோனா பாதிப்புக்கு ஏற்ப தடுப்பூசிகளை ஒதுக்க வேண்டும். 

மத்திய அரசு மூலமும், பிற வழிகள் மூலமும் தலா 50 லட்சம் தடுப்பூசிகளை வழங்க வேண்டும். 

மத்திய அரசு மூலம் 25.84 லட்சம் தடுப்பூசியும் பிற வழிகள் மூலம் 16.74 லட்சம் தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்திற்கு போதிய அளவிலான தடுப்பூசிகளை வழங்கக்கோரி மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.