வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தம்மம்பட்டியில் சேவா பாரதி அறக்கட்டளை சார்பில் கரோனா தடுப்பு பணி!

தம்மம்பட்டியில், ஆத்தூர் சேவா பாரதி,  பாரதி அறக்கட்டளை சார்பாக, கரோனா தடுப்பு ஆலோசனை சேவை மையம் துவக்கப்பட்டது.

News image
கரோனா தடுப்பு ஆலோசனை சேவை மையம்
Updated On :2 ஜூன் 2021, 5:50 am

DIN

தம்மம்பட்டி: தம்மம்பட்டியில், ஆத்தூர் சேவா பாரதி,  பாரதி அறக்கட்டளை சார்பாக, கரோனா தடுப்பு ஆலோசனை சேவை மையம் துவக்கப்பட்டது.

தம்மம்பட்டி பஸ்நிலையம் அருகே, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஆத்தூர் அரசு மருத்துவமனை முன்னாள் தலைமை மருத்துவர் அசோக் குமார் தலைமை வகித்தார். முன்னாள் கவுன்சிலர் திருச்செல்வன், ஆர்.எஸ்.எஸ். மாநில செயலாளர் பாலாஜி, ஆர்.எஸ்.எஸ். மாவட்ட செயலாளர் நீலகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் நடைபெற்ற ஆலோசனையின் படி, புதன்கிழமை முதல் ஆக்சிஜன் செறிவூட்டி வழங்குதல், மாஸ்க், கபசுர குடிநீர், ஆக்சிஜன் அளவு பார்த்து கூறுதல் என,  பொதுமக்களுக்கு சேவை செய்ய முடிவு செய்யப்பட்டது.

இந்த சேவை மையத்தில், தினமும் வைக்கப்படும் அரிசி, காய்கறிகளை, யார் வேண்டுமானாலும் இலவசமாக எடுத்துச் செல்லலாம் என, தம்மம்பட்டி ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி வேவ்ஸ் ராஜா தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.