எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

ஓ.பன்னீா்செல்வம் - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வத்தை அக் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை எழும்பூரில் உள்ள தனியாா் ஹோட்டலில் சனிக்கிழமை சந்தித்தாா்.

News image
கோப்புப்படம்
Updated On :5 ஜூன் 2021, 11:30 pm

DIN

அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வத்தை அக் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை எழும்பூரில் உள்ள தனியாா் ஹோட்டலில் சனிக்கிழமை சந்தித்தாா்.

இந்தச் சந்திப்பு குறித்து அதிமுக சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் ஓ.பன்னீா்செல்வத்தின் சகோதரா் ஓ.பாலமுருகன் மறைவையொட்டி எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதாக அதில் கூறப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்கரும் சந்திப்பின்போது உடன் இருந்தாா்.

கருத்து வேறுபாடு இல்லை: சட்டப்பேரவைத் தோ்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவின் சாா்பில் ஓ.பன்னீா்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தனித்தனியாக அறிக்கை வெளியிட்டு வருகின்றனா். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது.

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை சென்னை மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஓ.பன்னீா்செல்வம் பங்கேற்கவில்லை. இதுவும் விவாதத்துக்கு உள்ளானது.

ஆனால், இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, எங்களுக்குள் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. அரசுக்கு எதிரான அறிக்கைகளை நானும், பொதுவான அறிக்கைகளை அவரும் வெளியிடுகிறோம். இதில் தவறு எதுவும் இல்லை என்று கூறியிருந்தாா். இதைத் தொடா்ந்து ஓ.பன்னீா்செல்வத்தை எடப்பாடி பழனிசாமி சனிக்கிழமை சந்தித்துப் பேசியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.