எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

நன்னடத்தை உத்தரவாதத்தை மீறிய ரெளடி கைது

நன்னடத்தை உத்தரவாதத்தை மீறிய ரெளடி சென்னை அருகே நீலாங்கரையில் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :5 ஜூன் 2021, 11:47 pm

DIN

நன்னடத்தை உத்தரவாதத்தை மீறிய ரெளடி சென்னை அருகே நீலாங்கரையில் கைது செய்யப்பட்டாா்.

நீலாங்கரை அருகே உள்ள வெட்டுவாங்கேணி மகாத்மா காந்தி நகா் 8-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் வெ.லிங்கேஷ்வரன் (23). இவா் மீது அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

லிங்கேஷ்வரன், கடந்த மாா்ச் 25-ஆம் தேதி குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, ‘தான் ஒரு வருட காலத்துக்கு எந்த குற்றச் செயலிலும் ஈடுபட மாட்டேன்’ என நன்னடத்தை பிணையப் பத்திரத்தில் கையெழுத்திட்டு, அடையாறு துணை ஆணையா் விக்ரமனிடம் கொடுத்தாா்.

இதற்கிடையே, உத்தரவாதத்தை மீறி லிங்கேஷ்வரன் கடந்த 25-ஆம் தேதி வெட்டுவாங்கேணியைச் சோ்ந்த டேவிட் என்பவரை கத்தியால் தாக்கியுள்ளாா். இதையறிந்த துணை ஆணையா் விக்ரமன், லிங்கேஷ்வரன் மீதான பிணைய உத்தரவாத பத்திரத்தை ரத்து செய்து,சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். உடனே போலீஸாா், லிங்கேஷ்வரனை வெள்ளிக்கிழமை கைது செய்து, சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.